வணக்கம் அன்பர்களே நாம் பிறந்தது முதல் ஆயுள்காலம் வரை உழைத்து கொன்டுதான் இருக்கின்றோம். எதிர்காலத்தை கருதி வாழ்பவர்கள் சிலர் உண்டு,பலர் நடைமுறையில் எப்படி திசை உள்ளது நன்றாக இருக்கின்றதா என்று இதைமட்டும் தெரிந்துகொண்டு வாழ்க்கையை நடத்துவார்கள்.
ஆனால் நம்ஜாதகத்தில் எந்தபாவம் வழுபெற்றுள்ளது,எதிர்கால யோகதிசை எவ்வளவு காலம் இருக்கும்.நாம் என்ன செய்தால் யோகமற்ற திசையில் கூட வாழ்க்கையில் சிரமம் இன்றி வாழலாம். எப்படிபட்ட ஜாதகமாக இருந்தாலும் ஒருசில குறிப்பிட்ட பாவம் நமக்கு சாதகமான பாவம்மாக இருக்கும்.
நாம் எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு அந்தயோகபாவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பாகும்.அதேபோல் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட திசைகள் மட்டுமே பொருளாதாரத்தை கொடுக்கும் அமைப்பில் இருக்கும்.
ஆனால் அவர்கள் வாழ்க்கைமுழுவதும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து அந்த யோகதிசையில் நிறைய விரையம்,மந்தமாக செயல்பட்டு அந்த திசையை கோட்டைவிட்டுவிடுவார்கள். அதன்பின் அதேயே நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள்.