வணக்கம் அன்பர்களே வாழ்க்கையில் முக்கியமான பாவமான 6ம் பாவம் என்கிற வேலைவாய்ப்பு பாவங்கள் ஆகும். இந்த 6ம்பாவம் நமது ஜாதகத்தில் எப்படி உள்ளது என்று முதலில் நாம் தெறிந்துகொள்ள வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் வேலையில் சோர்ந்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம்.
அதேபோல் சிலருக்கு பிறந்த இடத்தில் வேலைப்பார்ப்பது வளர்ச்சியை கொடுக்கும், சிலருக்கு இடாமாற்றத்தின் மூலம் வேலையில் வளர்ச்சியை கொடுக்கும். சிலருக்கு வெளிநாடுமுலம் வேலையில் வளர்ச்சியை கொடுக்கும். சிலருக்கு பிறந்தஊர், பக்கத்துஊர், பக்கத்து ஸ்டேட் களில் மட்டுமே வேலையில் யோகத்தை கொடுக்கும்.
இவர்களுக்கு வெளிநாடுகளில் சென்று வேலைபார்த்தால் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்காது. அதேபோல் சிலருக்கு வேலைவாய்ப்புகள் அவர்களுடைய ஜாதகத்தில் 6ம் பாவம் வரவுக்கும் செலவுக்கும் சமமான பாவத்தை பெற்றிருக்கும்.இவர்கள் வேலையில் ஆயுள்முழுவதும் இருந்தாலும் இவர்களால் வேலைபார்த்த இடத்தில் இருந்து வந்த வருவாயை கொஞ்சம்கூட சேர்த்து வைக்க முடியாது. இவர்கள் ஜாதகத்தை வைத்து ஆலோசனை பெற்று அதன்படி மாற்றி அமைப்பது சிறப்பாகும்.
சிலருக்கு வேலையில் திறமைசாலிகளாக இருப்பார்கள் ஆனால் உழைப்புக்கேற்ற சம்பளம் இருக்காது. சிலருக்கு வேலையில் நிரந்தரமாக இருக்கமுடியாது 6மாதத்திற்கு மேல் வேலைபார்க்க முடியாமல் வேலைமாற்றம் அடைந்த வன்னம் இருப்பார்கள். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் கம்பெனி நிர்வாகபொருப்புகள் அனைத்தும் இவர்களிடத்தில் இருக்கும் ஆனால் உழைப்புகேற்ற, பொருப்புகளுக்கேற்ற ஊதியம் இருக்காது.இது போன்ற விசயங்கள் ஏன்நடக்கின்றன என்று நம் ஜாதகத்தை வைத்து தீர்வுகொள்வது, தீர்வுகான்பது சிறப்பாகும்.