RASI URUVAM

  •    > Details
  • கும்ப ராசியின் உருவம்

    ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக  ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான  சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
             
              கும்ப ராசியின் உருவம்
    கும்ப ராசியின் உருவம் பானையை தலையில் சுமந்தபடி நிற்கும் மனிதனாகும்.  பானையானது சேகரிப்பு மற்றும் சேமிப்பின் அடையாளமாகும்.  இதனால் கும்பராசிக்காரர்கள் யாரிடம் பழகினாலும் அவர்களிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.  அதாவது  இவர்கள் எதை செய்தாலும் லாபம் கருதியே செயல்படுவார்கள். பிறரிடம் உதவி கேட்பதற்கு இவர்கள் தயங்கவே மாட்டார்கள்,  யாரிடம் பழகினாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்ப்பார்கள். மனிதன் பானையை தலையில் சுமந்தபடி நிற்பதால், இந்த ராசிக்காரர்கள் பிறர் சுமைகளையும் தானே சுமப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதாவது அடிமை வேலை செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.
    !!! வாழ்க வளமுடன்!!!