விருச்சிகராசி அன்பர்களே!
குடும்பத்தில் அடிக்கடி அமைதிக் குறைவான சம்பங்கள் நிகழக்கூடும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாடு காரணமாகவோ பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் காரணமாக மனதில் உற்சாகம் பிறக்கும்.
அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.சக பணியாளர் களும் இணக்கமாகப் பழகுவார்கள்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். மற்றபடி பாதிப்பு இல்லை. எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.
குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 29, மே 4
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4
சந்திராஷ்டமம்: 1 மதியம் முதல் 2,3 முற்பகல் வரை
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.
இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே