Weekly Rasi Palangal

  •    > Details
  • THULAM RASI VARA PALAN

    துலாம் ராசி அன்பர்களே!

     குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு. வெளியூர்ப் பயணங்களால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

    வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்

    புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

    குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.

    அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 28, மே 4

    அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,9

    சந்திராஷ்டமம்:  29 விடியற்காலை முதல் 30, மே 1 மதியம் வரை

    வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமகா விஷ்ணு

    பரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

    பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

    அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்

    இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே