ரிஷப ராசி அன்பர்களே!
பணவரவுக்குக் குறைவில்லை என்றாலும், தேவையற்ற வீண் செலவுகள் உங்கள் மனதை சஞ்சலப்படுத்தும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு தோன்றக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். உடல் நலம் சீராகும்.திருமண முயற்சிகள் நல்லபடி முடியும். பயணங்களின்போது எச்சரிக்கை தேவை.
வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 30, மே 1
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,6
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே