P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
விருட்ச சாஸ்திரம் சுருக்கமாக,
உங்கள் கர்மவினை தீர மரக்கன்று
நடுங்கள்!!!
---------------------------------------------------------------------------------------------
ஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில் சார்ந்த பகுதியில் அல்லது வீடுகளில் அல்லது பொது இடங்களில் தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு, ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.
இப்படிச் செய்து அந்த மரத்தை பேணி பாதுகாத்து வர அம்மரக்கன்று வளர, வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும். அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும். அவரது கர்மவினைகள் அனைத்தும் நீங்கியிருக்கும். கர்மவினைகளை வெற்றிகொள்ள "விருட்ச சாஸ்திரம்" இப்படி ஒரு அபூர்வமான வழிகாட்டுகிறது.
உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு சித்தர்கள் உருவாக்கியது. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...
நட்சத்திரம்:
---------------------
(1) அஸ்வினி - ஈட்டி மரம்.
(2) பரணி - நெல்லி மரம்.
(3) கார்த்திகை - அத்திமரம்.
(4) ரோகிணி - நாவல்மரம்.
(5) மிருகசீரிடம் - கருங்காலி மரம்.
(6) திருவாதிரை - செங்கருங்காலி மரம்.
(7) புனர்பூசம் - மூங்கில் மரம்.
(8) பூசம் - அரசமரம்.
(9) ஆயில்யம் - புன்னை மரம்.
(10) மகம் - ஆலமரம்.
(11) பூரம் - பலா மரம்.
(12) உத்திரம் - அலரி மரம்.
(13) அஸ்தம் - அத்தி மரம்.
(14) சித்திரை - வில்வ மரம்.
(15) சுவாதி - மருத மரம்.
(16) விசாகம் - விலா மரம்.
(17) அனுஷம் - மகிழ மரம்.
(18) கேட்டை - பராய் மரம்.
(19) மூலம் - மராமரம்.
(20) பூராடம் - வஞ்சி மரம்.
(21) உத்திராடம் - பலா மரம்.
(22) திருவோணம் - எருக்க மரம்.
(23) அவிட்டம் - வன்னி மரம்.
(24) சதயம் - கடம்பு மரம்.
(25) பூரட்டாதி - தேமமரம்.
(26) உத்திரட்டாதி - வேம்பு மரம்.
(27) ரேவதி - இலுப்பை மரம்.
ராசிகள்
--------------
(1) மேஷம் - செஞ்சந்தனம் மரம்.
(2) ரிஷபம் - அத்தி மரம்.
(3) மிதுனம் - பலா மரம்.
(4) கடகம் - புரசு மரம்.
(5) சிம்மம் - குங்குமப்பூ மரம்.
(6) கன்னி - மா மரம்.
(7) துலாம் - மகிழ மரம்.
(8) விருச்சிகம் - கருங்காலி மரம்.
(9) தனுசு - அரச மரம்.
(10) மகரம் - ஈட்டி மரம்.
(11) கும்பம் - வன்னி மரம்.
(12) மீனம் - புன்னை மரம்.
அவரவர் ராசி நட்சத்திரத்திற்கும் உண்டான விருட்சங்களை தன் நட்சத்திரம் வரும் நாளில் கோவிலில் அல்லது வீட்டு தோட்டங்களில் தன் கைப்பட நட்டு வணங்கி வளர்த்து வர பலவித கர்ம தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ விருட்சம் விவரங்கள
சித்தர்களின் அபூர்வ மூலிகைகளை கட்டிடத்தினுள் வளர்ப்பதின் மூலம் பஞ்ச சக்திகளின் கூறுகளாகிய நவகிரங்களின் சக்திகளை உயர்நிலைப்படுத்தி கட்டிடத்தில் மையங்கொள்ளச்செய்து கட்டிடத்தின் குறைபாடுகளை நீக்கி கட்டிடத்தை வளப்படுத்தி அதன் மூலம் கட்டிடத்தில் வாழும் உயிர்களின் வாழ்வை வளப்படுத்தும் தெய்வீக முறை சித்தர் மூலிகை முறையாகும்.
இந்த முதல்வகை முறையின் மூலம் அவரவர்களின் ஊழ்வினைப்படி ஐம்பது விழுக்காடுகள் அளவிற்கு வாஸ்து வளன்களைப்பெற்று நலம்பெற முடியும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் 1008 வகையான ஜீவ(உயிருள்ள) மூலிகைகள் சித்தர் நூலில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் உதாரணத்திற்காக ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ மூலிகைகளின் விவரங்களை மட்டும் இப்பொழுது சித்தர்களின் குரல் முக பக்கத்தில் வழியாக இன்று பகிர்கிறேன்....
(1) ரவி விருட்சம்,
(2) சங்கர விருட்சம்,
(3) அலரி வேம்பு,
(4) அண்ட விருட்சம்,
(5) வேங்கைக்கரணி,
(6) தேவருத்திர விருட்சம்,
(7) "வெள்ளெருக்கு,"
(8) செந்நாவல்,
(9) சூரியபாணம்
போன்ற மூலிகைகள் சூரிய பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
(1) வெண் வேம்பு,
(2) சுந்தரி கற்பம்,
(3) நாத விருட்சம்,
(4) வெள்ளவுரி,
(5) துர்க்கைக் கரணி,
(6) வெண் நாவல்,
(7) வெண் வேம்பு,
(8) வெண் புங்கன்,
(9) வெண் முருக்கு
போன்ற மூலிகைகள் சந்திர பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
(1) சத்தியகரணை,
(2) வேல் விருட்சம்,
(3) கஸ்தூரி விருட்சம்,
(4) செவ்வவுரி,
(4) ஞானக்கரணி,
(5) மகா வில்வம்,
(6) செம்மா விருட்சம்,
(7) "கருங்காலிவிருட்சம்,"
(8) செண்பகவிருட்சம்
போன்ற மூலிகைகள் செவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
(1) நாராயணவிருட்சம்,
(2) கோதண்டவிருட்சம்,
(3) கருநெல்லி,
(4) மறைமூலி,
(5) பூதக்கரணி,
(6) "கருநாயுருவி,"
(7) கருந்துளசி,
(8) கருணைவிருட்சம்,
(9) சங்குவிருட்சம்
போன்ற மூலிகைகள் புத பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
(1) பொற்சீந்தில்,
(2) கயல்விருட்சம்,
(3) வேதச்சாரளை,
(4) உண்ணாவிருட்சம்,
(4) சித்தர்கற்பம்,
(5) திருநீற்றுப்பத்திரி,
(6) "அரசவிருட்சம்,"
(7) முல்லைவிருட்சம்
(8) வித்யாவிருட்சம்
போன்ற மூலிகைகள் குரு பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
(1) சக்திவிருட்சம்,
(2) மோகினிவிருட்சம்,
(3) காமவிருட்சம்,
(4) போகவிருட்சம்,
(5) ஆசனவிருட்சம்,
(6) "அத்திவிருட்சம்,"
(7) சந்தனவிருட்சம்,
(8) வெண்டாமரைமூலி,
(9) காமாட்சிவிருட்சம்
போன்ற மூலிகைகள் சுக்கிர பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
(1) நீலவேம்பு,
(2) அஞ்சனைவிருட்சம்,
(3) கரும்புங்கன்,
(4) இரும்புக்கொடி,
(5) அரனார்விருட்சம்,
(6) "வன்னிவிருட்சம்,"
(6) மகிழம்விருட்சம்,
(7) கருங்குவளை விருட்சம்
(8) மந்தாரை விருட்சம்
போன்ற மூலிகைகள் சனி பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
(1) கறுஞ்சீந்தில்,
(2) கார்கோடகவிருட்சம்,
(3) கல்லரவுவிருட்சம்,
(4) பணிக்கொடி,
(5) மகாவல்லாரை,
(6) மருதவிருட்சம்,
(7) கடம்புவிருட்சம்,
(8) "அறுகுவிருட்சம்,"
(9) மோட்சவிருட்சம்
போன்ற மூலிகைகள் ராகு பவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
(1) பிரம்மவிருட்சம்,
(2) ஞானிவிருட்சம்,
(3) கோதைவிருட்சம்,
(4) எழில்விளம்பிவிருட்சம்,
(5) மதியூக்கி,
(6) "தேவதர்ப்பை,"
(7) பஞ்சாட்சரமூலி,
(8) யோகவிருட்சம்
(9) செம்பணி விருட்சம்
போன்ற மூலிகைகள் கேது பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
தனித்தனியாக ஒவ்வொரு மரத்திலும் செய்த அஞ்சனம் மை உள்ளது. தனித்தனியாக ஒவ்வொரு மரத்திலும் எடுத்த புல்லுருவி முறையாக காப்பு கட்டி , எடுத்த என்ன காரியம் என்றாலும் உலகத்தில் சாதிக்கலாம்..
கண் திருஷ்டிக்கு தாவர பரிகாரம்!!!
-----------------------------------------------------------------
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என பொருள்படும் ஒருவர் அழகாக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார் என்றால் அந்த தெருவில் செல்லும் எல்லோரும் அந்த வீட்டையே உற்று நோக்குவர்.
இதை வீட்டை கண் வைக்கிறார்கள் என கிராமத்தில் சொல்வதுண்டு அப்பொழுது திருஷ்டியை போக்க என்ன செய்ய வேண்டுமென்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த கண்பார்வையும் படுமாறு அங்கு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்க கூடிய குணம் உண்டு. அதனால் வீட்டு வாசலில் அழகான ரோஜா செடிகளை பிறர் பார்வையில் படுமாறு வாங்கி வைக்கலாம். தொங்கும் தோட்டங்களை அமைக்கலாம்.
தாவரங்களுக்கு கடும் கண் பார்வையை ஈர்க்கும் சக்தி உள்ளதால் இது போல ரோஜா செடி வளர்ப்பது, தோட்டங்கள் அமைப்பது மூலமாக வீட்டுக்கு ஏற்படும் தீய தோஷங்களை போக்கலாம்.
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

