Guru

  •    > Details
  • துலாம்(குருபெயா்ச்சி)

    துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

    சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியில் சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் வரும். துலாராசிகாரர்கள் உள்ளொன்று வைத்து வெளியே ஒன்று பேசத்தெரியாதவர்கள். எல்லாருக்கும் தன்னால் என்ன நல்லது செய்ய முடியும் என்று யோசித்துச் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்று பார்ப்போம்.


    இதுவரை 7 -ம் வீட்டில் அமர்ந்து பல நல்ல பலன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த குருபகவான் தற்போது ராசிக்கு 8 -ம் வீட்டில் சென்று அமர்கிறார். 8 -ம் வீடான் ரிஷபமும் சுக்கிரனின் ராசியே. எனவே அஷ்டம குரு கஷ்டங்கள் தருவாரோ என்கிற பயம் தேவையில்லை.

    அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் அதனால் ஆதாயமும் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். அநாவசிய செலவுகள் துரத்தும் என்றாலும் செலவுகளுக்குப் பஞ்சமில்லை. மனத்தின் பலவீனங்களை மறைக்கப்பாருங்கள். பிடிவாதப் போக்கை விட்டுவிடுங்கள். தீய பழக்கங்களிலிருந்து விலகியிருங்கள். நண்பர்களிலும் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். கடன் பிரச்னை குறித்துக் கவலைப்படுவீர்கள். வேண்டாத அச்சம் உள்ளூர இருக்கும்.

    குடும்பத்தில் அனைவரையும் அரவனைத்துப்போங்கள். குழந்தைகளிடம் கடுகடுப்பு காட்டவேண்டாம். கணவன் மனைவிக்குள் தேவையற்ற சந்தேகத்தைத் தவிர்ப்பது நல்லது. வேலைச்சுமையால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லைகளும் அவ்வப்போது வந்து நீங்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்ல தல்ல.

    குருபகவான் 2 - ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு உண்டு. பணம் வந்தாலும் தங்கவில்லையே என புலம்பினீர்களே! இனி பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்கவும் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பலசிந்தனைகளுடன் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். அம்மாவுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். அவர்வழிச் சொத்து கைக்கு வரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.

    குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

    1.5.24 முதல் 12.6.24 வரை உங்களின் பாதகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கும். அலைச்சல் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள். மூத்த சகோதர வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.


    12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவியுயர்வு உண்டு. சவாலான காரியங்களைக் கூட கச்சிதமாக முடித்துக் காட்டுவீர்கள். வீண்பழி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நகை வாங்குவீர்கள். கோபம் தணியும். வீடு, மனை அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். பொது நிகழ்ச்சி, கோவில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பிரபலமடைவீர்கள். மகளுக்கு திருமணம் முடியும்.

    19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்களின் தன சப்தமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் வாழ்க்கைத்துணைவழியில் அலைச்சல் இருக்கும். முதுகுவலி, வயிற்றுவலி வந்து நீங்கும். புது சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களால் உதவியுண்டு. வீடு மாறுவீர்கள்.

    வியாபாரம் : பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படியாக வரவழைப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்க்ச் செலுத்த வேண்டியவற்றை முறையே செலுத்தி விடுங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த கூச்சல், குழப்பங்களெல்லாம் நீங்கும். பிரச்னைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லுகள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.

    உத்தியோகம் : காலநேரம் பார்க்காமல் உழைத்தும் அதற்கான பலனையும், பாராட்டையும் வேறொருவர் தட்டிச் சென்றாரே! இனி திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களிடம் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள். கணினித் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். புது சலுகைகள் கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கத்தான் செய்யும். கலைஞர்களே! ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.

    இந்த குருப்பெயர்ச்சி மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியையும், வாழ்வில் ஒருபடி முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.