பத்திரை கரணம்
இந்தக் கரணத்தில் பிறந்தவன் வலிமைமிக்கவன். சுந்தரன் ,பேச்சில் மனதில் சஞ்சலம்,சிக்கனம் கடைபிடிப்பாா். பாவ செயல் செய்வாா்கள். கொடியவன்,ஆண்கள் கெடுதல் மற்றும் ஒழுக்கம் தவறி கேடுக்கட்ட செயல் செய்ய நடக்க தோணும்,விரக்தியுள்ளவன், செயல் திறன் இல்லாதவன், ஆளுக்கேற்றபடி பேசும் திறன் கொண்டவா். இவற்றின் பறவைகள் கோழிகள் மற்றும் சேவல்கள். இவர்கள் முடிந்தவரை கோழிக்கறி சாப்பிடக்கூடாது. ஒரு கோழியின் இயல்பைக் கொண்டு, அவை ஒரு செயலைப் பிரித்து பகுப்பாய்வு செய்யும் போக்கைக் கொண்டுள்ளன. இதனால் சிலர் ஆராய்ச்சித் துறையில் இருப்பார்கள்.
பத்திரை கரண பகவான் கேது ஆவார். இவர் ஒரு ஆன்மீகவாதியாக, மருத்துவம், ருத்ராட்சம் மற்றும் பூஜை பொருள் விற்பனை செய் ப வராக,
மாந்திரீகம், மத பிரசாரம், அறிவியல் ஆராய்ச்சி, மருந்தகம், விஷத்தன்மை முறிக்கும் நாட்டு வைத்தியராக, வக்கீல் மற்றும் சட்டத் தொடர்பு உடைய துறையில் வேலை செய்வது நன்று.
வழிபட வேண்டிய தெய்வங்கள்& பரிகாரங்கள்:
உங்களால் முடிந்த அளவு மக்களுக்கு நல்ல நீர், மோர் தருவது மற்றும் பறவைக்கு தானியம் தருவது நன்று. ஹனுமான், திருச்செந்தூர் முருகர், மற்றும் நீர் நிலை உள்ள கோவிலுக்கு செல்வது நல்ல பலனை கொடுக்கும்.