KARANAPALANGAL

  •    > Details
  • வணிசை கரணம் பலன்

    வன்னிசை கரணம்
    வன்னிசை கரணத்தில் பிறந்தவர்கள்  கடுமையான சுபாவம் கொண்டவர்கள்  தன்னைத் தேடி வந்தடைந்தவர்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள்,  கரும்பை போல இனிய மொழி பேசுவான், பெண் பித்தன், உள்ளதை உள்ளபடி சொல்லாமல் இல்லாததும் பொல்லாததுமாக இருட்டடித்து பொய் சொல்வார். சமூக ஒழுக்கத்திற்கு மாறான சிந்தனை உடையவர், கற்பனையாக பேசுவதில் வல்லவர்.  இவர்களுக்கு உடலில் குறைபாடு இருந்து கொண்டே இருக்கும்  அல்லது வாழ்வில் குறைபாடு இருக்கும் என்று நூலில் கூறப்படுகிறது. இவர்கள் மிருகம் காளை அல்லது பசு ஆகும்.

      வண்ணிசை கரணத்தில் பிறந்தவர்களுக்கு கரணநாதன் சூரியன். இவர்கள் புகழ் கொடுக்கும் துறைகள்,  கலைத்துறை, அரசியல்,  அதிகாரம் மிக்க துறை,  தந்தை தொழில்,  கோதுமை வியாபாரம்,  அரசு தொடர்பான கம்பெனி,  மருத்துவமனை,  புகழ் உச்சியில் உள்ள தொழில் அனைத்தும் சிறந்து விளங்குவார்கள்.

    வழிபட வேண்டிய தெய்வங்கள்& பரிகாரங்கள்:
    சிவலிங்கம், நந்தீஸ்வரன்,  சிதைந்த பழம்பெரும் கோவிலுக்குப்  பிரதோஷ காலங்களில்   நைவேத்திய-  அபிஷேகப் பொருள்கள்,  நல்லெண்ணெய்,  மலர் மாலைகள் வாங்கி கொடுப்பது நன்று.  சாலையோர மக்களுக்கு  கம்பளி, போர்வை  தருவது நன்மை பயக்கும்.