CHANDRASTAMAM

  •    > Details
  • மூலம் நட்சத்திரம்

    சந்திரன் என்றால் மதி என்று சொல்வார்கள். மதி என்றால் அறிவு என்றும் தமிழ் சொல்கிறது. ஆதிகாலம் தொட்டே சந்திரனும் மனநிலையும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்டு வந்துள்ளது என ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லி வருகின்றன. நிலவும் அதன் குளுமையும் அகப்பாடலின் அடிநாதமாகவே தமிழர்களின் வாழ்வில் இருந்துவந்துள்ளது. சந்திரன் மங்கிய நாள்களில் மனநிலை மந்தமடைவதாக ஜோதிட நூல்கள் சொல்கின்றன. பௌர்ணமி, அமாவாசை நாள்களில் அலைகடல் பொங்கி ஆர்ப்பரிப்பது எல்லாம் புவிஈர்ப்பு விசையும் சந்திரனின் காந்த சக்தியும் செய்யும் ஜாலங்கள் என்று புவியியல் விளக்கமளிக்கிறது. புவிஈர்ப்பு விசையின் தாக்கத்தால் வாழும் மனிதர்களையும் சந்திர சக்தி ஆட்கொள்ளத்தான் செய்கிறது என்பது ஜோதிடத்தின் கூற்று.

    இதனாலேயே மனிதர்களின் ஒவ்வொரு நாளிலும் சந்திரனின் ஆதிக்கம் உள்ளது என்று ஜோதிடம் தெரிவிக்கிறது. சம்பந்தமே இல்லாமல் ஒருநாள் உற்சாகமாக இருப்பதும், தேவையே இல்லாமல் ஒருநாள் சோர்வாக இருப்பதும்கூட சந்திரனின் தாக்கத்தால்தான் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதன் உண்மை என்ன, அதிலும் முக்கியமாக சந்திராஷ்டமம் என்றால் என்ன, சந்திராஷ்டம நாளில் எந்த முயற்சிகளையும் ஏன் செய்யக் கூடாது, 

    “சந்திரன் மனோகாரகன், அதாவது நமது மனதை தீர்மானிப்பவன். கற்பனை சக்தியின் நாயகன் சந்திரன். சந்திரனின் ஆதிக்கம் குறைந்தால் நமது சொல்லும் செயலும் தெளிவில்லாமல் போகும். மனதுக்குப் பொறுப்பான சந்திரனும் புத்திக்கு பொறுப்பான புதனும் பாதிக்கப்பட்டால் கட்டாயம் அவர் மனநிலை பாதிக்கப்படுவார். இது ஜோதிடம் மட்டும் அல்ல, அப்படி பாதிக்கப்பட்டவர்கள் பலரது ஜாதகத்தை வைத்து இது நிரூபிக்கப்பட்டும் உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கான ராசி என்பதே அவர் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதுதான். ஒரு மாதத்தில் 12 ராசிகளையும் சந்திரன் கடக்கும்போது, அந்த நாளில் சந்திரன் இருக்கும் இடத்தைப் பொறுத்து நம் குணம் மாறுபடுகிறது. இப்படி சந்திரனே நம் செயல்களைத் தீர்மானிப்பதால் ஒவ்வொருவருக்கும் மாதத்தில் இரண்டேகால் நாள் வரும் சந்திராஷ்டம நாளில், எந்தச் செயலையும் தொடங்க வேண்டாம் என்று ஜோதிடம் சொல்கிறது.

    சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டாவது ராசியில் இருக்கிறார் என்பது அர்த்தம். ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் இருந்தால் அந்த நாள் சந்திராஷ்டமம். உதாரணமாக மேஷ ராசிக்கு, விருச்சிக ராசி எட்டாவது ராசி. விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில் அதாவது விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவற்றில் சந்திரன் இருக்கும்போது, மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம். 12 ராசிகளுக்கும் இவ்வாறு சந்திரன் இடம் பெயர்ந்து அவரவர்களுக்கான சந்திராஷ்டம நாளில் செயல்களை மந்தமாக்குகிறார்.

    எட்டாம் இடம் என்பது ஜோதிட ரீதியில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என்பதால் இவ்வாறு சொல்லப்படுகிறது. சந்திரனின் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவரின் மனநிலை நிர்ணயிக்கப்படுகிறது. சந்திராஷ்டம காலத்தில் கோபமும் குழப்பமும் ஏற்படும் என்பதாலேயே முக்கிய காரியங்களை அந்த நாளில் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள். நீண்ட பயணங்கள், புதிய பொருள்களை வாங்குவதுகூட அந்த நாளில் செய்யக் கூடாது. மன உளைச்சல், குழப்பம், மந்தம், பொறுமையின்மை, ஆத்திரம், எரிச்சல், கோபம், இவையெல்லாம் கூடிவரும் சந்திராஷ்டம நாளில் எந்த முக்கிய செயலையும் செய்ய வேண்டாம் என்பது ஜோதிடம் சொல்லும் ஒரு சூட்சும காரணம்.

    முக்கிய செயல், முக்கிய சந்திப்பு, பேச்சுவார்த்தை எல்லாவற்றையுமே தள்ளி வைப்பது நல்லது. மற்றபடி சந்திராஷ்டமத்துக்குப் பரிகாரம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. அன்றைய தினம் அனாவசிய பேச்சுகளைக் குறைத்து ஆண்டவனை எண்ணி வழிபடுவதும் தியானிப்பதும் நலம் தரும்.
    இங்கு சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை அதாவது 12 மாதங்களுக்கும் நமது நட்ச்சத்திரத்திற்கு சரியாக சந்திரஸ்டமம் எப்போதுவரும் என்பதை  என்பதை சித்திரை முதல் பங்குனி வரை உள்ள தமிழ் மாதம் வரும் சந்திரஸ்டமத்தை தெளிவாக கிழே கொடுக்கப்பட்டுள்ளது. பாா்த்து பயன் பெறவும்.நன்றி...



    மூலம் நட்சத்திரம் சந்திரஸ்டமம் வரும் தமிழ் மாதங்கள்:

    சித்திரை :16ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    வைகாசி:12ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    ஆனி :07ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    ஆடி :31,04ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    ஆவனி:26ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    புரட்டாசி :23ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    ஜப்பசி :20ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    காா்த்திகை :17ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    மாா்கழி :15ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    தை :13ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    மாசி :10ம் தேதி சந்திரஸ்டமம் வரும்

    பங்குனி :09ம் தேதி சந்திரஸ்டமம் வரும்